search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சொத்து குவிப்பு வழக்கு"

    • வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
    • குற்றம் செய்ததற்கான எந்த முகாந்திரமும் இல்லை என இருவரையும் வழக்கிலிருந்து விடுவித்து நீதிபதி கிறிஸ்டோபர் உத்தரவிட்டார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    கடந்த 2006-2011 திமுக ஆட்சி காலத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் தங்கம் தென்னரசு. இவர் மீதும், இவரது மனைவி மணிமேகலை மீதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக கடந்த 2012-ம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த நிலையில், இந்த வழக்கு இன்று தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கிறிஸ்டோபர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த அதிமுக ஆட்சியில் போடப்பட்ட வழக்கில் இருவரும் குற்றம் செய்ததற்கான எந்த விதமான முகாந்திரமும் இல்லை என அறிவித்து இருவரையும் வழக்கிலிருந்து விடுவித்து நீதிபதி கிறிஸ்டோபர் உத்தரவிட்டார்.

    • சுப்ரீம் கோர்ட்டுக்கு சமூக ஆர்வலர் 2-வது முறையாக கடிதம் அனுப்பியுள்ளார்.
    • ஜெயலலிதாவின் வீட்டில் இருந்து 27 வகையான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    பெங்களூரு :

    சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூரு தனிக்கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை கர்நாடக ஐகோர்ட்டு ரத்து செய்தது. அதை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு வரும்போது, ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டதால், அவரது பெயர் நீக்கப்பட்டது.

    இதையடுத்து சசிகலா உள்பட 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்தனர். அவர்கள் தண்டனை காலத்தை அனுபவித்து விட்டு வெளியே சென்றுவிட்டனர். இந்த வழக்கின்போது, ஜெயலலிதாவின் வீட்டில் இருந்து 27 வகையான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில் 11 ஆயிரத்து 344 விலை உயர்ந்த பட்டு சேலைகள், சால்வைகள், 750 ஜோடி செருப்புகள் ஆகிய பொருட்களும் அடங்கும்.

    இதில் சேலைகள், சால்வைகள், செருப்புகள் ஆகிய 3 பொருட்களும் சேதம் அடையும் வகையானவை என்பதால் அவற்றை ஏலம் விட வேண்டும் என்று கோரி பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, சுப்ரீம் கோர்ட்டுக்கு கடந்த சில மாதங்களுக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் அந்த பொருட்கள் இதுவரை ஏலம் விடப்படவில்லை. இந்த நிலையில் இப்போது அவர் 2-வது முறையாக இதே கோரிக்கையை அதாவது அந்த 3 பொருட்களையும் ஏலம் விடக்கோரி சுப்ரீம் கோர்ட்டுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

    இதுகுறித்து சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி கூறுகையில், 'ஜெயலலிதாவின் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் சேலைகள், செருப்புகள், சால்வைகள் ஏலம் விடப்படும் வரை நான் சுப்ரீம் கோர்ட்டுக்கு கடிதம் அனுப்பி கொண்டே இருப்பேன்' என்றார்.

    • வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஆ.ராசாவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது.
    • ஆ.ராசா உள்பட 3 பேர் ஜனவரி 10-ல் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

    சென்னை:

    2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுத்தியதாக ஆ.ராசா மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் 2017-ம் ஆண்டு டெல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது, 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த தீர்ப்புக்கு எதிராக சி.பி.ஐ. டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.

    இதற்கிடையே, ஆ.ராசா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கூட்டாளிகள் உள்பட 16 பேர் மீது கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு 18-ம் தேதி அன்று வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

    அதாவது, 1999-ம் ஆண்டு பா.ஜ.க. கூட்டணி அரசில் அமைச்சராக இருந்தது முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் ஆ.ராசா தனது அமைச்சர் பதவியை பயன்படுத்தி கூடுதலாக ரூ.27.92 கோடி அளவுக்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சி.பி.ஐ. குற்றம்சாட்டியது.

    இதனடிப்படையில் ஆ.ராசா வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. ரெய்டு நடந்தது. டெல்லி, சென்னை, திருச்சி, நீலகிரி, கோவை உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. 2ஜி வழக்கில் கிடைத்த சில ஆவணங்கள் அடிப்படையில் தான் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. சோதனையின் போது வருமான வரி கணக்குகள், சொத்து ஆவணங்கள், நிதிநிலை அறிக்கைகள் மற்றும் நிலையான வைப்பு ரசீதுகள் போன்ற ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    இந்த ஆவணங்கள் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணை தற்போது முடிவிற்கு வந்துள்ளது. 2015-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில் சுமார் 7 ஆண்டுகள் ஆன நிலையில் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. வருமானத்திற்கு அதிகமாக ரூ.5.53 கோடி வரை சொத்து சேர்த்துள்ளதாக ஆ.ராசா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவுக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. ஆ.ராசா உள்பட 3 பேர் ஜனவரி 10-ல் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

    • 2015-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில் சுமார் 7 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    • வருமானத்திற்கு அதிகமாக ரூ.5.53 கோடி வரை சொத்து சேர்த்துள்ளதாக ஆ.ராசா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை:

    2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுத்தியதாக ஆ.ராசா மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

    இந்த வழக்கில் 2017-ம் ஆண்டு டெல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது, 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

    இந்த தீர்ப்புக்கு எதிராக சி.பி.ஐ. டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.

    இதற்கிடையே, ஆ.ராசா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கூட்டாளிகள் உள்பட 16 பேர் மீது கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு 18-ந் தேதி அன்று வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

    அதாவது 1999-ம் ஆண்டு பா.ஜனதா கூட்டணி அரசில் அமைச்சராக இருந்தது முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் ஆ.ராசா தனது அமைச்சர் பதவியை பயன்படுத்தி கூடுதலாக ரூ.27.92 கோடி அளவுக்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சி.பி.ஐ. குற்றம் சாட்டியது.

    இதனடிப்படையில் ஆ.ராசா வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. ரெய்டு நடந்தது. டெல்லி, சென்னை, திருச்சி, நீலகிரி, கோவை உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

    2ஜி வழக்கில் கிடைத்த சில ஆவணங்கள் அடிப்படையில் தான் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. சோதனையின் போது வருமான வரி கணக்குகள், சொத்து ஆவணங்கள், நிதிநிலை அறிக்கைகள் மற்றும் நிலையான வைப்பு ரசீதுகள் போன்ற ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    இந்த ஆவணங்கள் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணை தற்போது முடிவிற்கு வந்துள்ளது.

    2015-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில் சுமார் 7 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    வருமானத்திற்கு அதிகமாக ரூ.5.53 கோடி வரை சொத்து சேர்த்துள்ளதாக ஆ.ராசா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

    வருமான ஆதாரங்களில் இருந்து 579 சதவீதம் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இறுதி தீர்ப்பு நிலுவையில் இருக்கும் போது ஜெயலலிதா உயிரிழந்துள்ளதால், அவர் தரப்பிடம் இருந்து அபராத தொகையை வசூலிக்க அனுமதி கோரிய கர்நாடக அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. #Jayalalitha #DACase
    சென்னை:

    சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹாவால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டனர்.

    4 ஆண்டுகள் சிறை தண்டனை, 100 கோடி அபராதம் விதிக்கப்பட்டதால் தனது முதல்வர் பதவியை ஜெயலலிதா இழந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா சார்பில் கர்நாடக ஐகோர்ட் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி குமாரசாமி, அனைவரையும் விடுவித்து தீர்ப்பு வழங்கினார்.

    கர்நாடக ஐகோர்ட் தீர்ப்பை எதித்து சுப்ரீம் கோர்ட்டில் அம்மாநில அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனுக்கள் விசாரித்து முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.

    இதன் பின்னர், 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சுப்ரீம் கோர்ட் இந்த வழக்கில் இறுதி தீர்ப்பை வழங்கியது. அப்போது, பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நீதிபதிகள் உறுதி செய்தனர். ஆனால், ஜெயலலிதா உயிருடன் இல்லாததால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

    சிறை தண்டனையில் இருந்து மட்டுமே அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், ரூ.100 கோடி அபராத தொகையை வசூலிக்க உத்தரவிட வேண்டும் என கர்நாடக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தது. ஆனால், சுப்ரீம் கோர்ட் அதனை நிராகரித்தது. 

    இதனை அடுத்து, மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணை முடிந்து இறுதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட காலத்தில் தான் ஜெயலலிதா மரணமடைந்தார். இதனால், அவரை குற்றவாளி என அறிவிக்க வேண்டும். அபராத தொகையை வசூலிக்க அனுமதி அளிக்க வேண்டும் என கர்நாடக அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

    இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 
    ×